பாடநெறி அறிமுகம்
பாடநெறி அறிமுகம்
தமிழ் இலக்கணத்தை குழந்தைகள் பயமின்றி புரிந்து கொள்ளும் வகையில் ஒலிப்பியல் கற்றலுடன் இணைக்கும் சிறப்பு பாடநெறி இது. குழந்தைகள் கேட்கவும், பார்க்கவும், சொல்லவும், பொருத்தவும், பிரிக்கவும், வாக்கியங்களில் பயன்படுத்தவும் கூடிய செயல்முறை மூலம் இலக்கணம் கற்பிக்கப்படும்.
எழுத்துகள் எவ்வாறு சொற்களாகவும், சொற்கள் எவ்வாறு வாக்கியங்களாகவும் மாறுகின்றன என்பதையும், இலக்கண அமைப்பு பொருளை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் கதைகள், பாடல்கள், பட அட்டைகள், விளையாட்டுகள் மற்றும் Worksheets மூலம் கற்றுக்கொள்வார்கள்.
முக்கிய பாடப்பகுதிகள்
- எழுத்து, சொல் மற்றும் வாக்கியம்
- பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல்
- ஒருமை மற்றும் பன்மை
- சொல் வகைகள் மற்றும் சொல்வளம்
- சொல் உருவாக்கம் மற்றும் அடிப்படை ஒலி மாற்றங்கள்
- எளிய புணர்ச்சி அறிமுகம்
- குற்றியலுகரம் மற்றும் குறுக்கங்கள்
- வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை அறிமுகம்
கற்றல் முடிவு
பயிற்சி முடிவில் குழந்தைகள் அடிப்படை இலக்கணக் கருத்துகளைப் புரிந்து, பொதுவான சொல் வகைகளை அடையாளம் கண்டு, பொருள் கொண்ட வாக்கியங்களை அமைத்து, வாசிப்பு மற்றும் எழுதுதல் செயல்பாடுகளில் இலக்கணத்தைப் பயன்படுத்துவார்கள்.
கால அட்டவணை
ஆறு மாதங்கள்; வாரம் இரண்டு வகுப்புகள்; ஒவ்வொரு வகுப்பும் சுமார் 60 முதல் 75 நிமிடங்கள்.