தமிழால் இணைவோம் · தமிழில் உயர்வோம்
செம்மொழி பயிற்சி
தமிழ் ஒலிப்பியல்

செம்மொழி பயிற்சி

Classical Tamil Programme

தமிழின் வரலாறு, பண்பாடு, சொல்வளம், இலக்கிய மரபு மற்றும் செம்மொழிச் சிறப்பை வயதிற்கேற்ற முறையில் அறிமுகப்படுத்தும் பயிற்சி.

பாடநெறி அறிமுகம்

பாடநெறி அறிமுகம்

தமிழ் ஒரு செம்மொழியாக பெற்றுள்ள ஆழம், அழகு, வரலாறு மற்றும் இலக்கிய மரபை மாணவர்களுக்கு வயதிற்கேற்ற முறையில் அறிமுகப்படுத்தும் பயிற்சி இது. சங்க இலக்கியம், பழமொழிகள், அறநெறிக் கருத்துகள், பாரம்பரியக் கதைகள் மற்றும் செம்மொழிச் சொற்கள் எளிய விளக்கங்களுடன் வழங்கப்படும்.

கடினமான இலக்கிய ஆய்விலிருந்து தொடங்காமல், கதை சொல்லல், வழிகாட்டப்பட்ட வாசிப்பு, உச்சரிப்பு, சொல்வளச் செயல்பாடுகள் மற்றும் பண்பாட்டு திட்டங்கள் மூலம் ஆர்வம் உருவாக்கப்படும்.

முக்கிய பாடப்பகுதிகள்

  • தமிழின் வரலாறு மற்றும் தனிச்சிறப்பு
  • சங்க இலக்கியம் அறிமுகம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பழமொழிகள் மற்றும் அறக்கருத்துகள்
  • தமிழ் இலக்கிய மரபிலிருந்து கதைகள்
  • செம்மொழிச் சொற்கள் மற்றும் இன்றைய பொருள்
  • வாசிப்பு, பேச்சு மற்றும் வழங்கல் செயல்பாடுகள்
  • பண்பாட்டு திட்டங்கள் மற்றும் படைப்பாற்றல் பணிகள்

கற்றல் முடிவு

மாணவர்கள் தமிழ் மரபின் மீது மதிப்புணர்வை வளர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மொழிக் கருத்துகளை எளிய மொழியில் புரிந்து, வாசிப்பு, சொல்வளம் மற்றும் Presentation திறன்களை மேம்படுத்துவார்கள்.

உங்கள் தமிழ் கற்றல் பயணத்தைத் தொடங்குங்கள்

செம்மொழி பயிற்சி

பயிற்சி பதிவு செய்யுங்கள்