பாடநெறி அறிமுகம்
பாடநெறி அறிமுகம்
தமிழ் மொழியை முதன்முதலாகக் கற்கும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஆரம்பநிலைப் பாடநெறி இது. எழுத்துகளை தனித்தனியாக மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, ஒலியை கேட்டு, எழுத்தைக் கண்டு, சரியாக உச்சரித்து, அதைச் சொற்களில் பயன்படுத்தும் இயல்பான கற்றல் முறையை இந்தப் பயிற்சி வழங்குகிறது.
ஒவ்வொரு பாடத்திலும் ஒலி அறிதல், எழுத்து அடையாளம், படம்–எழுத்து தொடர்பு, கதை, பாடல், உடல் அசைவு, Flashcards, Worksheets, விளையாட்டுகள் மற்றும் வாசிப்பு பயிற்சிகள் இணைக்கப்படுகின்றன. குழந்தைகள் தனி ஒலிகளிலிருந்து ஒலிச்சேர்க்கை, சொல் உருவாக்கம் மற்றும் எளிய வாசிப்பிற்கு படிப்படியாக முன்னேறுவார்கள்.
கற்றல் பகுதிகள்
- உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஒலிகள்
- எழுத்து–ஒலி மற்றும் ஒலி–எழுத்து தொடர்பு
- படம் மற்றும் சொல்வளம்
- இரண்டு மற்றும் மூன்று எழுத்து ஒலிச்சேர்க்கை
- எளிய சொல் உருவாக்கம்
- கேட்கும் மற்றும் பேசும் பயிற்சி
- சரியான உச்சரிப்பு மற்றும் தொடக்க வாசிப்பு
கற்பித்தல் முறை
கேட்போம், பார்ப்போம், சொல்வோம், செய்வோம், சேர்ப்போம், வாசிப்போம், பயன்படுத்துவோம் என்ற கற்றல் பாதை பின்பற்றப்படும். பாடல், கதை, Action Learning, Matching Games, Colouring, Art & Craft மற்றும் Picture Reading இடம்பெறும்.
யாருக்கு?
சுமார் 4 முதல் 8 வயது குழந்தைகள், தமிழ் கற்கத் தொடங்குபவர்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகள், தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்கள் மற்றும் வாசிப்பில் கூடுதல் உதவி தேவைப்படும் குழந்தைகள்.
வகுப்பு அமைப்பு
பரிந்துரைக்கப்படும் கால அளவு ஆறு மாதங்கள். வாரம் இரண்டு வகுப்புகள்; ஒவ்வொரு வகுப்பும் சுமார் 60 நிமிடங்கள்.
கற்றல் முடிவு
பயிற்சி முடிவில் குழந்தைகள் முக்கிய தமிழ் ஒலிகளையும் எழுத்துகளையும் அடையாளம் கண்டு, எளிய ஒலிகளை இணைத்து, தொடக்கநிலைச் சொற்களை வாசித்து, தமிழில் தன்னம்பிக்கையுடன் பங்கேற்கத் தொடங்குவார்கள்.